நாம் அனைவரும் எதை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று யாருக்காவது தெரியுமா?
நமது வாழ்க்கை எங்கு சென்று கொண்டிருகிறது ...நாம் எதன் பின் செல்கின்றோம்?
நாம் எது செய்தாலும் செய்யாவிட்டாலும் நேரம் என்பது சென்று கொண்டே இருக்கும். இந்த நேரத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள நாம் அனைவரும் ஒரு இலட்சியத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.
இலட்சியத்தை வாழ்கையின் அங்கமாக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். அந்த லட்சியத்தில் நாம் வெற்றி பெறுகிறோமா இல்லையா என்பது நமது குறிக்கோளல்ல. லட்சியத்தோடு பயணிக்கிறோம என்பதுதான் குறிக்கோல்.
அது சரி , லட்சியம் இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும். வாழ்க்கை எப்பொழுதும் போல சென்று கொண்டிருக்கும் அல்லவா என்று சில கேள்வி எழும். ஆம் லட்சியம் இல்லாவிட்டாலும் வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கும். ஆனால் ஒரு நாள் நாம் திரும்பி நமது வாழ்க்கையை பார்த்தல் எதுவுமே இல்லாமல் போய்விடும். அப்பொழுது வருத்தப்பட்டு ஒன்றும் ஆகா போவதில்லை . திரும்பி ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்வி கூட எழும்.
நடந்து வந்த பாதையை நினைவு கூறுவது எவ்வளவு சுகம் என்று உணர்ந்தவர்களுக்கு புரியும்.அந்த சுகத்தை உணர கஷ்டம் தேவை.
லட்சியம் இருந்தால் தான் கஷ்டம் தெரியும் கஷ்டம் தெரிந்தால் தான் சுகம் என்ன என்று தெரியும் .அந்து சுகத்தை உணர முடியும்.
எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்கொள்வோம். நடந்து சென்று கொண்டிருக்கிறோம் , அப்பொழுது தாகம் எடுக்கிறது , உடனே பக்கத்தில் தண்ணீர் இருக்கிறது , அதை அருந்துகிறோம். நமது தாகம் தீர்ந்து விடுகிறது.
ஒருவேளை தண்ணீர் அங்கு இல்லாமல் இருந்தால். தண்ணீருக்காக அலைந்திருப்போம் . அப்படியும் தண்ணீர் கிடைக்காமல் இருந்தால் தாகம் மேலோங்கி இருக்கும். நீண்ட தேடுதலுக்கு பின்பு தண்ணீர் கிடைத்தால் அப்பொழுது அந்த தண்ணீரின் சுவையே வேறு அல்லவே?
அது போலத்தான் கஷ்டம் இருந்தால் தான் சுகத்தின் அருமை தெரியும். வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும்.
அர்த்ததோடு வாழ்வோம் வளர்வோம்.
நன்றி.....

No comments:
Post a Comment