வாழ்கையில் மிக முக்கியம் என்று கேட்டால் பல பேர் சொல்லுவர் நிம்மதி என்று.. வாழ்கையில் அடி பட்டவர்களை கேட்டால் அவர்கள் சொல்லும் ஒன்று "பணம்". பணத்திற்கு இப்பொழுதுதான் மதிப்பு வந்து விட்டதாக நாம் நினைக்கிறோம். இல்லை பழைய காலத்திலிருந்தே இந்த பணம் நமது வாழ்கையில் அங்கமாகி இருக்கிறது என்று சொல்வதை விட முக்கியமானதாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். "பணம் பத்தும் செய்யும்", "பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும்" என்ற பழமொழிகள் அன்றைய காலத்திலும் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
" கள்ளதானும் கைப்பொருள் கொண்டு வந்தால் எல்லாரும் வந்து எதிர்கொள்வர் , இல்லாதானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் " என்று அவ்வையார் பாடினார். ஆகவே அன்று முதல் இன்று வரை பணம் ஒரு முக்கியமானதாகவே இருந்து வருகிறது. பாசம் பணத்தை விட உயர்ந்தது தான் இருப்பினும் பணம் இல்லாமல் ஒன்றும் இல்ல இந்த உலகத்தில்.
பணம் இருப்பவனுக்கு மரியாதையை எவ்வளவு என்று நம் வாழ்கையில் கண்கூடாக நாம் பார்க்கிறோம். பணக்காரன் அவனிடம் இருக்கும் பணத்தை நம்மிடம் கொடுக்கப்போவதில்லை இருப்பினும் அவனுக்கு இருக்கும் மதிப்பே தனி. இல்லை என்று எவரேனும் மறுக்க முடியுமா. மகிழ்வுந்தில் செல்லும் ஒருவனுக்கு கிடைக்கும் மரியாதையை இரு சக்கர வாகனத்தில் செல்பவனுக்கு கிடைப்பதில்லை.
அந்த பணத்திற்காக பலவற்றை இழந்து நிறைய மனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.